காமத்துப்பால் Kāmattuppāl
Love: couplets 1081 to 1330, in 25 chapters of ten.
Tamil text, English verse and prose from tk120404/thirukkural (version cf3ff6c, Apache 2.0). English verse: G.U. Pope (1886). Transliteration: ISO 15919, by machine. See the whole work for the map of its books and chapters.
தகை அணங்குறுத்தல் Takai aṇaṅkuṟuttal: The Pre-marital love
- 1081
அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலும் என் நெஞ்சு.Aṇaṅkukol āymayil kollō kaṉaṅkuḻai
Mātarkol mālum eṉ neñcuGoddess? or peafowl rare? She whose ears rich jewels wear,
Is she a maid of human kind? All wildered is my mind - 1082
நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு
தானைக்கொண் டன்ன துடைத்து.Nōkkiṉāḷ nōkketir nōkkutal tākkaṇaṅku
Tāṉaikkoṇ ṭaṉṉa tuṭaittuShe of the beaming eyes, To my rash look her glance replies,
As if the matchless goddess' hand Led forth an armed band - 1083
பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்
பெண்டகையால் பேரமர்க் கட்டு.Paṇṭaṟiyēṉ kūṟṟeṉ pataṉai iṉiyaṟintēṉ
Peṇṭakaiyāl pēramark kaṭṭuDeath's form I formerly Knew not; but now 'tis plain to me;
He comes in lovely maiden's guise, With soul-subduing eyes - 1084
கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப்
பேதைக்கு அமர்த்தன கண்.Kaṇṭār uyiruṇṇum tōṟṟattāl peṇṭakaip
Pētaikku amarttaṉa kaṇIn sweet simplicity, A woman's gracious form hath she;
But yet those eyes, that drink my life, Are with the form at strife - 1085
கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
நோக்கமிம் மூன்றும் உடைத்து.Kūṟṟamō kaṇṇō piṇaiyō maṭavaral
Nōkkamim mūṉṟum uṭaittuThe light that on me gleams, Is it death's dart? or eye's bright beams?
Or fawn's shy glance? All three appear In form of maiden here - 1086
கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர்
செய்யல மன்இவள் கண்.Koṭumpuruvam kōṭā maṟaippiṉ naṭuṅkañar
Ceyyala maṉivaḷ kaṇIf cruel eye-brow's bow, Unbent, would veil those glances now;
The shafts that wound this trembling heart Her eyes no more would dart - 1087
கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர்
படாஅ முலைமேல் துகில்.Kaṭāak kaḷiṟṟiṉmēṟ kaṭpaṭām mātar
Paṭāa mulaimēl tukilAs veil o'er angry eyes Of raging elephant that lies,
The silken cincture's folds invest This maiden's panting breast - 1088
ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள்
நண்ணாரும் உட்குமென் பீடு.Oṇṇutaṟ kōo uṭaintatē ñāṭpiṉuḷ
Naṇṇārum uṭkumeṉ pīṭuAh woe is me my might, That awed my foemen in the fight,
By lustre of that beaming brow Borne down, lies broken now - 1089
பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்கு
அணியெவனோ ஏதில தந்து.Piṇaiyēr maṭanōkkum nāṇum uṭaiyāṭku
Aṇiyevaṉō ētila tantuLike tender fawn's her eye; Clothed on is she with modesty;
What added beauty can be lent; By alien ornament - 1090
உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல்
கண்டார் மகிழ்செய்தல் இன்று.Uṇṭārkaṇ allatu aṭunaṟāk kāmampōl
Kaṇṭār makiḻceytal iṉṟuThe palm-tree's fragrant wine, To those who taste yields joys divine;
But love hath rare felicity For those that only see
குறிப்பறிதல் Kuṟippaṟital: Recognition of the Signs
- 1091
இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு
நோய்நோக்கொன் றந்நோய் மருந்து.Irunōkku ivaḷuṇkaṇ uḷḷatu orunōkku
Nōynōkkoṉ ṟannōy maruntuA double witchery have glances of her liquid eye;
One glance is glance that brings me pain; the other heals again - 1092
கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில்
செம்பாகம் அன்று பெரிது.Kaṇkaḷavu koḷḷum ciṟunōkkam kāmattil
Cempākam aṉṟu perituThe furtive glance, that gleams one instant bright,
Is more than half of love's supreme delight - 1093
நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்
யாப்பினுள் அட்டிய நீர்.Nōkkiṉāḷ nōkki iṟaiñciṉāḷ aḵtavaḷ
Yāppiṉuḷ aṭṭiya nīrShe looked, and looking drooped her head:
On springing shoot of love 'its water shed - 1094
யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும்.Yāṉnōkkum kālai nilaṉnōkkum nōkkākkāl
Tāṉnōkki mella nakumI look on her: her eyes are on the ground the while:
I look away: she looks on me with timid smile - 1095
குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண்
சிறக்கணித்தாள் போல நகும்Kuṟikkoṇṭu nōkkāmai allāl orukaṇ
Ciṟakkaṇittāḷ pōla nakumShe seemed to see me not; but yet the maid
Her love, by smiling side-long glance, betrayed - 1096
உறாஅ தவர்போல் சொலினும் செறாஅர்சொல்
ஒல்லை உணரப் படும்.Uṟāa tavarpōl coliṉum ceṟāarcol
Ollai uṇarap paṭumThough with their lips affection they disown,
Yet, when they hate us not, 'tis quickly known - 1097
செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும்
உறாஅர்போன்று உற்றார் குறிப்பு.Ceṟāac ciṟucollum ceṟṟārpōl nōkkum
Uṟāarpōṉṟu uṟṟār kuṟippuThe slighting words that anger feign, while eyes their love reveal
Are signs of those that love, but would their love conceal - 1098
அசையியற்கு உண்டாண்டோர் ஏஎர்யான் நோக்கப்
பசையினள் பைய நகும்.Acaiyiyaṟku uṇṭāṇṭōr ēeryāṉ nōkkap
Pacaiyiṉaḷ paiya nakumI gaze, the tender maid relents the while;
And, oh the matchless grace of that soft smile - 1099
ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்
காதலார் கண்ணே உள.Ētilār pōlap potunōkku nōkkutal
Kātalār kaṇṇē uḷaThe look indifferent, that would its love disguise,
Is only read aright by lovers' eyes - 1100
கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனும் இல.Kaṇṇoṭu kaṇiṇai nōkkokkiṉ vāyccoṟkaḷ
Eṉṉa payaṉum ilaWhen eye to answering eye reveals the tale of love,
All words that lips can say must useless prove
புணர்ச்சி மகிழ்தல் Puṇarcci makiḻtal: Rejoicing in the Embrace
- 1101
கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே உள.Kaṇṭukēṭṭu uṇṭuyirttu uṟṟaṟiyum aimpulaṉum
Oṇtoṭi kaṇṇē uḷaAll joys that senses five- sight, hearing, taste, smell, touch- can give,
In this resplendent armlets-bearing damsel live - 1102
பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை
தன்நோய்க்குத் தானே மருந்து.Piṇikku maruntu piṟamaṉ aṇiyiḻai
Taṉnōykkut tāṉē maruntuDisease and medicine antagonists we surely see;
This maid, to pain she gives, herself is remedy - 1103
தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு.Tāmvīḻvār meṉṟōḷ tuyiliṉ iṉitukol
Tāmaraik kaṇṇāṉ ulakuThan rest in her soft arms to whom the soul is giv'n,
Is any sweeter joy in his, the Lotus-eyed-one's heaven - 1104
நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்
தீயாண்டுப் பெற்றாள் இவள்?Nīṅkiṉ teṟūum kuṟukuṅkāl taṇṇeṉṉum
Tīyāṇṭup peṟṟāḷ ivaḷ?Withdraw, it burns; approach, it soothes the pain;
Whence did the maid this wondrous fire obtain - 1105
வேட்ட பொழுதின் அவையவை போலுமே
தோட்டார் கதுப்பினாள் தோள்.Vēṭṭa poḻutiṉ avaiyavai pōlumē
Tōṭṭār katuppiṉāḷ tōḷIn her embrace, whose locks with flowery wreaths are bound,
Each varied form of joy the soul can wish is found - 1106
உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு
அமிழ்தின் இயன்றன தோள்.Uṟutōṟu uyirtaḷirppat tīṇṭalāl pētaikku
Amiḻtiṉ iyaṉṟaṉa tōḷAmbrosia are the simple maiden's arms; when I attain
Their touch, my withered life puts forth its buds again - 1107
தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால்
அம்மா அரிவை முயக்கு.Tammil iruntu tamatupāttu uṇṭaṟṟāl
Ammā arivai muyakkuAs when one eats from household store, with kindly grace
Sharing his meal: such is this golden maid's embrace - 1108
வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை
போழப் படாஅ முயக்கு.Vīḻum iruvarkku iṉitē vaḷiyiṭai
Pōḻap paṭāa muyakkuSweet is the strict embrace of those whom fond affection binds,
Where no dissevering breath of discord entrance finds - 1109
ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம்
கூடியார் பெற்ற பயன்.Ūṭal uṇartal puṇartal ivaikāmam
Kūṭiyār peṟṟa payaṉThe jealous variance, the healing of the strife, reunion gained:
These are the fruits from wedded love obtained - 1110
அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம்
செறிதோறும் சேயிழை மாட்டு.Aṟitōṟu aṟiyāmai kaṇṭaṟṟāl kāmam
Ceṟitōṟum cēyiḻai māṭṭuThe more men learn, the more their lack of learning they detect;'
Tis so when I approach the maid with gleaming jewels decked
நலம் புனைந்து உரைத்தல் Nalam puṉaintu uraittal: The Praise of her Beauty
- 1111
நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்
மென்னீரள் யாம்வீழ் பவள்.Naṉṉīrai vāḻi aṉiccamē niṉṉiṉum
Meṉṉīraḷ yāmvīḻ pavaḷO flower of the sensitive plant! than thee
More tender's the maiden beloved by me - 1112
மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண்
பலர்காணும் பூவொக்கும் என்று.Malarkāṇiṉ maiyātti neñcē ivaḷkaṇ
Palarkāṇum pūvokkum eṉṟuYou deemed, as you saw the flowers, her eyes were as flowers, my soul,
That many may see; it was surely some folly that over you stole - 1113
முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்
வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு.Muṟimēṉi muttam muṟuval veṟināṟṟam
Vēluṇkaṇ vēyttō ḷavaṭkuAs tender shoot her frame; teeth, pearls; around her odours blend;
Darts are the eyes of her whose shoulders like the bambu bend - 1114
காணின் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும்
மாணிழை கண்ணொவ்வேம் என்று.Kāṇiṉ kuvaḷai kaviḻntu nilaṉnōkkum
Māṇiḻai kaṇṇovvēm eṉṟuThe lotus, seeing her, with head demiss, the ground would eye,
And say, 'With eyes of her, rich gems who wears, we cannot vie.' - 1115
அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுகப்பிற்கு
நல்ல படாஅ பறை.Aṉiccappūk kālkaḷaiyāḷ peytāḷ nukappiṟku
Nalla paṭāa paṟaiThe flowers of the sensitive plant as a girdle around her she placed;
The stems she forgot to nip off; they'll weigh down the delicate waist - 1116
மதியும் மடந்தை முகனும் அறியா
பதியின் கலங்கிய மீன்.Matiyum maṭantai mukaṉum aṟiyā
Patiyiṉ kalaṅkiya mīṉThe stars perplexed are rushing wildly from their spheres;
For like another moon this maiden's face appears - 1117
அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் க்குப் போல
மறுவுண்டோ மாதர் முகத்து.Aṟuvāy niṟainta avirmatikkup kkup pōla
Maṟuvuṇṭō mātar mukattuIn moon, that waxing waning shines, as sports appear,
Are any spots discerned in face of maiden here - 1118
மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்
காதலை வாழி மத.Mātar mukampōl oḷiviṭa vallaiyēl
Kātalai vāḻi mataFarewell, O moon! If that thine orb could shine
Bright as her face, thou shouldst be love of mine - 1119
மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின்
பலர்காணத் தோன்றல் மதி.Malaraṉṉa kaṇṇāḷ mukamotti yāyiṉ
Palarkāṇat tōṉṟal matiIf as her face, whose eyes are flowers, thou wouldst have charms for me,
Shine for my eyes alone, O moon, shine not for all to see - 1120
அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம்.Aṉiccamum aṉṉattiṉ tūviyum mātar
Aṭikku neruñcip paḻamThe flower of the sensitive plant, and the down on the swan's white breast,
As the thorn are harsh, by the delicate feet of this maiden pressed
காதற் சிறப்புரைத்தல் Kātaṟ ciṟappuraittal: Declaration of Love"s special Excellence
- 1121
பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாலெயிறு ஊறிய நீர்.Pāloṭu tēṉkalan taṟṟē paṇimoḻi
Vāleyiṟu ūṟiya nīrThe dew on her white teeth, whose voice is soft and low,
Is as when milk and honey mingled flow - 1122
உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன
மடந்தையொடு எம்மிடை நட்பு.Uṭampoṭu uyiriṭai eṉṉamaṟ ṟaṉṉa
Maṭantaiyoṭu emmiṭai naṭpuBetween this maid and me the friendship kind
Is as the bonds that soul and body bind - 1123
கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழும்
திருநுதற்கு இல்லை இடம்.Karumaṇiyiṟ pāvāynī pōtāyām vīḻum
Tirunutaṟku illai iṭamFor her with beauteous brow, the maid I love, there place is none;
To give her image room, O pupil of mine eye, begone - 1124
வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல்
அதற்கன்னள் நீங்கும் இடத்து.Vāḻtal uyirkkaṉṉaḷ āyiḻai cātal
Ataṟkaṉṉaḷ nīṅkum iṭattuLife is she to my very soul when she draws nigh;
Dissevered from the maid with jewels rare, I die - 1125
உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன்
ஒள்ளமர்க் கண்ணாள் குணம்.Uḷḷuvaṉ maṉyāṉ maṟappiṉ maṟappaṟiyēṉ
Oḷḷamark kaṇṇāḷ kuṇamI might recall, if I could once forget; but from my heart
Her charms fade not, whose eyes gleam like the warrior's dart - 1126
கண்ணுள்ளின் போகார் இமைப்பின் பருகுவரா
நுண்ணியர்எம் காத லவர்.Kaṇṇuḷḷiṉ pōkār imaippiṉ parukuvarā
Nuṇṇiyarem kāta lavarMy loved one's subtle form departs not from my eyes;
I wink them not, lest I should pain him where he lies - 1127
கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும்
எழுதேம் கரப்பாக்கு அறிந்து.Kaṇṇuḷḷār kāta lavarākak kaṇṇum
Eḻutēm karappākku aṟintuMy love doth ever in my eyes reside;
I stain them not, fearing his form to hide - 1128
நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்
அஞ்சுதும் வேபாக் கறிந்து.Neñcattār kāta lavarāka veytuṇṭal
Añcutum vēpāk kaṟintuWithin my heart my lover dwells; from food I turn
That smacks of heat, lest he should feel it burn - 1129
இமைப்பின் கரப்பாக்கு அறிவல் அனைத்திற்கே
ஏதிலர் என்னும் இவ் வூர்.Imaippiṉ karappākku aṟival aṉaittiṟkē
Ētilar eṉṉum iv vūrI fear his form to hide, nor close my eyes:'
Her love estranged is gone!' the village cries - 1130
உவந்துறைவர் உள்ளத்துள் என்றும் இகந்துறைவர்
ஏதிலர் என்னும் இவ் வூர்.Uvantuṟaivar uḷḷattuḷ eṉṟum ikantuṟaivar
Ētilar eṉṉum iv vūrRejoicing in my very soul he ever lies;'
Her love estranged is gone far off!' the village cries
நாணுத் துறவுரைத்தல் Nāṇut tuṟavuraittal: The Abandonment of Reserve
- 1131
காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம்
மடலல்லது இல்லை வலி.Kāmam uḻantu varuntiṉārkku ēmam
Maṭalallatu illai valiTo those who've proved love's joy, and now afflicted mourn,
Except the helpful 'horse of palm', no other strength remains - 1132
நோனா உடம்பும் உயிரும் மடலேறும்
நாணினை நீக்கி நிறுத்து.Nōṉā uṭampum uyirum maṭalēṟum
Nāṇiṉai nīkki niṟuttuMy body and my soul, that can no more endure,
Will lay reserve aside, and mount the 'horse of palm' - 1133
நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன்
காமுற்றார் ஏறும் மடல்.Nāṇoṭu nallāṇmai paṇṭuṭaiyēṉ iṉṟuṭaiyēṉ
Kāmuṟṟār ēṟum maṭalI once retained reserve and seemly manliness;
To-day I nought possess but lovers' 'horse of palm' - 1134
காமக் கடும்புனல் உய்க்கும் நாணொடு
நல்லாண்மை என்னும் புணை.Kāmak kaṭumpuṉal uykkum nāṇoṭu
Nallāṇmai eṉṉum puṇaiLove's rushing tide will sweep away the raft
Of seemly manliness and shame combined - 1135
தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு
மாலை உழக்கும் துயர்.Toṭalaik kuṟuntoṭi tantāḷ maṭaloṭu
Mālai uḻakkum tuyarThe maid that slender armlets wears, like flowers entwined,
Has brought me 'horse of palm,' and pangs of eventide - 1136
மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற
படல்ஒல்லா பேதைக்கென் கண்.Maṭalūrtal yāmattum uḷḷuvēṉ maṉṟa
Paṭalollā pētaikkeṉ kaṇOf climbing 'horse of palm' in midnight hour, I think;
My eyes know no repose for that same simple maid - 1137
கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப்
பெண்ணின் பெருந்தக்க தில்.Kaṭalaṉṉa kāmam uḻantum maṭalēṟāp
Peṇṇiṉ peruntakka tilThere's nought of greater worth than woman's long-enduring soul,
Who, vexed by love like ocean waves, climbs not the 'horse of palm' - 1138
நிறையரியர் மன்அளியர் என்னாது காமம்
மறையிறந்து மன்று படும்.Niṟaiyariyar maṉaḷiyar eṉṉātu kāmam
Maṟaiyiṟantu maṉṟu paṭumIn virtue hard to move, yet very tender, too, are we;
Love deems not so, would rend the veil, and court publicity - 1139
அறிகிலார் எல்லாரும் என்றேஎன் காமம்
மறுகின் மறுகும் மருண்டு.Aṟikilār ellārum eṉṟēeṉ kāmam
Maṟukiṉ maṟukum maruṇṭu'There's no one knows my heart,' so says my love,
And thus, in public ways, perturbed will rove - 1140
யாம்கண்ணின் காண நகுப அறிவில்லார்
யாம்பட்ட தாம்படா ஆறு.Yāmkaṇṇiṉ kāṇa nakupa aṟivillār
Yāmpaṭṭa tāmpaṭā āṟuBefore my eyes the foolish make a mock of me,
Because they ne'er endured the pangs I now must drie
அலர் அறிவுறுத்தல் Alar aṟivuṟuttal: The Announcement of the Rumour
- 1141
அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப்
பலரறியார் பாக்கியத் தால்.Alareḻa āruyir niṟkum ataṉaip
Palaraṟiyār pākkiyat tālBy this same rumour's rise, my precious life stands fast;
Good fortune grant the many know this not - 1142
மலரன்ன கண்ணாள் அருமை அறியாது
அலரெமக்கு ஈந்ததிவ் வூர்.Malaraṉṉa kaṇṇāḷ arumai aṟiyātu
Alaremakku īntativ vūrThe village hath to us this rumour giv'n, that makes her mine;
Unweeting all the rareness of the maid with flower-like eyne - 1143
உறாஅதோ ஊரறிந்த கெளவை அதனைப்
பெறாஅது பெற்றன்ன நீர்த்து.Uṟāatō ūraṟinta keḷavai ataṉaip
Peṟāatu peṟṟaṉṉa nīrttuThe rumour spread within the town, is it not gain to me?
It is as though that were obtained that may not be - 1144
கவ்வையால் கவ்விது காமம் அதுவின்றேல்
தவ்வென்னும் தன்மை இழந்து.Kavvaiyāl kavvitu kāmam atuviṉṟēl
Tavveṉṉum taṉmai iḻantuThe rumour rising makes my love to rise;
My love would lose its power and languish otherwise - 1145
களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம்
வெளிப்படுந் தோறும் இனிது.Kaḷittoṟum kaḷḷuṇṭal vēṭṭaṟṟāl kāmam
Veḷippaṭun tōṟum iṉituThe more man drinks, the more he ever drunk would be;
The more my love's revealed, the sweeter 'tis to me - 1146
கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்
திங்களைப் பாம்புகொண் டற்று.Kaṇṭatu maṉṉum orunāḷ alarmaṉṉum
Tiṅkaḷaip pāmpukoṇ ṭaṟṟuI saw him but one single day: rumour spreads soon
As darkness, when the dragon seizes on the moon - 1147
ஊரவர் கெளவை எருவாக அன்னைசொல்
நீராக நீளும்இந் நோய்.Ūravar keḷavai eruvāka aṉṉaicol
Nīrāka nīḷumin nōyMy anguish grows apace: the town's report
Manures it; my mother's word doth water it - 1148
நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கெளவையால்
காமம் நுதுப்பேம் எனல்.Neyyāl erinutuppēm eṉṟaṟṟāl keḷavaiyāl
Kāmam nutuppēm eṉalWith butter-oil extinguish fire! 'Twill prove
Harder by scandal to extinguish love - 1149
அலர்நாண ஒல்வதோ அஞ்சலோம்பு என்றார்
பலர்நாண நீத்தக் கடை.Alarnāṇa olvatō añcalōmpu eṉṟār
Palarnāṇa nīttak kaṭaiWhen he who said 'Fear not!' hath left me blamed,
While many shrink, can I from rumour hide ashamed - 1150
தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும்
கெளவை எடுக்கும்இவ் வூர்.Tāmvēṇṭiṉ nalkuvar kātalar yāmvēṇṭum
Keḷavai eṭukkumiv vūrIf we desire, who loves will grant what we require;
This town sends forth the rumour we desire
பிரிவு ஆற்றாமை Pirivu āṟṟāmai: Separation unendurable
- 1151
செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்
வல்வரவு வாழ்வார்க் குரை.Cellāmai uṇṭēl eṉakkurai maṟṟuniṉ
Valvaravu vāḻvārk kuraiIf you will say, 'I leave thee not,' then tell me so;
Of quick return tell those that can survive this woe - 1152
இன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும்
புன்கண் உடைத்தால் புணர்வு.Iṉkaṇ uṭaittavar pārval pirivañcum
Puṉkaṇ uṭaittāl puṇarvuIt once was perfect joy to look upon his face;
But now the fear of parting saddens each embrace - 1153
அரிதரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும்
பிரிவோ ரிடத்துண்மை யான்.Aritarō tēṟṟam aṟivuṭaiyār kaṇṇum
Pirivō riṭattuṇmai yāṉTo trust henceforth is hard, if ever he depart,
E'en he, who knows his promise and my breaking heart - 1154
அளித்தஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்தசொல்
தேறியார்க்கு உண்டோ தவறு.Aḷittañcal eṉṟavar nīppiṉ teḷittacol
Tēṟiyārkku uṇṭō tavaṟuIf he depart, who fondly said, 'Fear not,' what blame's incurred
By those who trusted to his reassuring word - 1155
ஓம்பின் அமைந்தார் பிரிவோம்பல் மற்றவர்
நீங்கின் அரிதால் புணர்வு.Ōmpiṉ amaintār pirivōmpal maṟṟavar
Nīṅkiṉ aritāl puṇarvuIf you would guard my life, from going him restrain
Who fills my life! If he depart, hardly we meet again - 1156
பிரிவுரைக்கும் வன்கண்ணர் ஆயின் அரிதவர்
நல்குவர் என்னும் நசை.Pirivuraikkum vaṉkaṇṇar āyiṉ aritavar
Nalkuvar eṉṉum nacaiTo cherish longing hope that he should ever gracious be,
Is hard, when he could stand, and of departure speak to me - 1157
துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை
இறைஇறவா நின்ற வளை.Tuṟaivaṉ tuṟantamai tūṟṟākol muṉkai
Iṟaiiṟavā niṉṟa vaḷaiThe bracelet slipping from my wrist announced before
Departure of the Prince that rules the ocean shore - 1158
இன்னாது இனன்இல்ஊர் வாழ்தல் அதனினும்
இன்னாது இனியார்ப் பிரிவு.Iṉṉātu iṉaṉilūr vāḻtal ataṉiṉum
Iṉṉātu iṉiyārp pirivu'Tis sad to sojourn in the town where no kind kinsmen dwell;'
Tis sadder still to bid a friend beloved farewell - 1159
தொடிற்சுடின் அல்லது காமநோய் போல
விடிற்சுடல் ஆற்றுமோ தீ.Toṭiṟcuṭiṉ allatu kāmanōy pōla
Viṭiṟcuṭal āṟṟumō tīFire burns the hands that touch; but smart of love
Will burn in hearts that far away remove - 1160
அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றிப்
பின்இருந்து வாழ்வார் பலர்.Aritāṟṟi allalnōy nīkkip pirivāṟṟip
Piṉiruntu vāḻvār palarSorrow's sadness meek sustaining, Driving sore distress away,
Separation uncomplaining Many bear the livelong day
படர்மெலிந் திரங்கல் Paṭarmelin tiraṅkal: Complainings
- 1161
மறைப்பேன்மன் யானிஃதோ நோயை இறைப்பவர்க்கு
ஊற்றுநீர் போல மிகும்.Maṟaippēṉmaṉ yāṉiḵtō nōyai iṟaippavarkku
Ūṟṟunīr pōla mikumI would my pain conceal, but see! it surging swells,
As streams to those that draw from ever-springing wells - 1162
கரத்தலும் ஆற்றேன்இந் நோயைநோய் செய்தார்க்கு
உரைத்தலும் நாணுத் தரும்.Karattalum āṟṟēṉin nōyainōy ceytārkku
Uraittalum nāṇut tarumI cannot hide this pain of mine, yet shame restrains
When I would tell it out to him who caused my pains - 1163
காமமும் நாணும் உயிர்காவாத் தூங்கும்என்
நோனா உடம்பின் அகத்து.Kāmamum nāṇum uyirkāvāt tūṅkumeṉ
Nōṉā uṭampiṉ akattuMy soul, like porter's pole, within my wearied frame,
Sustains a two-fold burthen poised, of love and shame - 1164
காமக் கடல்மன்னும் உண்டே அதுநீந்தும்
ஏமப் புணைமன்னும் இல்.Kāmak kaṭalmaṉṉum uṇṭē atunīntum
Ēmap puṇaimaṉṉum ilA sea of love, 'tis true, I see stretched out before,
But not the trusty bark that wafts to yonder shore - 1165
துப்பின் எவனாவர் மன்கொல் துயர்வரவு
நட்பினுள் ஆற்று பவர்.Tuppiṉ evaṉāvar maṉkol tuyarvaravu
Naṭpiṉuḷ āṟṟu pavarWho work us woe in friendship's trustful hour,
What will they prove when angry tempests lower - 1166
இன்பம் கடல்மற்றுக் காமம் அஃதடுங்கால்
துன்பம் அதனிற் பெரிது.Iṉpam kaṭalmaṟṟuk kāmam aḵtaṭuṅkāl
Tuṉpam ataṉiṟ perituA happy love's sea of joy; but mightier sorrows roll
From unpropitious love athwart the troubled soul - 1167
காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன்
யாமத்தும் யானே உளேன்.Kāmak kaṭumpuṉal nīntik karaikāṇēṉ
Yāmattum yāṉē uḷēṉI swim the cruel tide of love, and can no shore descry,
In watches of the night, too, 'mid the waters, only I - 1168
மன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்திரா
என்னல்லது இல்லை துணை.Maṉṉuyir ellām tuyiṟṟi aḷittirā
Eṉṉallatu illai tuṇaiAll living souls in slumber soft she steeps;
But me alone kind night for her companing keeps - 1169
கொடியார் கொடுமையின் தாம்கொடிய இந்நாள்
நெடிய கழியும் இரா.Koṭiyār koṭumaiyiṉ tāmkoṭiya innāḷ
Neṭiya kaḻiyum irāMore cruel than the cruelty of him, the cruel one,
In these sad times are lengthening hours of night I watch alone - 1170
உள்ளம்போன்று உள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர்
நீந்தல மன்னோஎன் கண்.Uḷḷampōṉṟu uḷvaḻic celkiṟpiṉ veḷḷanīr
Nīntala maṉṉōeṉ kaṇWhen eye of mine would as my soul go forth to him,
It knows not how through floods of its own tears to swim
கண் விதுப்பழிதல் Kaṇ vituppaḻital: Eyes consumed with Grief
- 1171
கண்தாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய்
தாம்காட்ட யாம்கண் டது.Kaṇtām kaluḻva tevaṉkolō taṇṭānōy
Tāmkāṭṭa yāmkaṇ ṭatuThey showed me him, and then my endless pain
I saw: why then should weeping eyes complain - 1172
தெரிந்துணரா நோக்கிய உண்கண் பரிந்துணராப்
பைதல் உழப்பது எவன்?Terintuṇarā nōkkiya uṇkaṇ parintuṇarāp
Paital uḻappatu evaṉ?How glancing eyes, that rash unweeting looked that day,
With sorrow measureless are wasting now away - 1173
கதுமெனத் தாநோக்கித் தாமே கலுழும்
இதுநகத் தக்க துடைத்து.Katumeṉat tānōkkit tāmē kaluḻum
Itunakat takka tuṭaittuThe eyes that threw such eager glances round erewhile
Are weeping now. Such folly surely claims a smile - 1174
பெயலாற்றா நீருலந்த உண்கண் உயலாற்றா
உய்வில்நோய் என்கண் நிறுத்து.Peyalāṟṟā nīrulanta uṇkaṇ uyalāṟṟā
Uyvilnōy eṉkaṇ niṟuttuThose eyes have wept till all the fount of tears is dry,
That brought upon me pain that knows no remedy - 1175
படலாற்றா பைதல் உழக்கும் கடலாற்றாக்
காமநோய் செய்தஎன் கண்.Paṭalāṟṟā paital uḻakkum kaṭalāṟṟāk
Kāmanōy ceytaeṉ kaṇThe eye that wrought me more than sea could hold of woes,
Is suffering pangs that banish all repose - 1176
ஓஒ இனிதே எமக்கிந்நோய் செய்தகண்
தாஅம் இதற்பட் டது.Ōo iṉitē emakkinnōy ceytakaṇ
Tāam itaṟpaṭ ṭatuOho! how sweet a thing to see! the eye
That wrought this pain, in the same gulf doth lie - 1177
உழந்துழந் துள்நீர் அறுக விழைந்திழைந்து
வேண்டி அவர்க்கண்ட கண்.Uḻantuḻan tuḷnīr aṟuka viḻaintiḻaintu
Vēṇṭi avarkkaṇṭa kaṇAching, aching, let those exhaust their stream,
That melting, melting, that day gazed on him - 1178
பேணாது பெட்டார் உளர்மன்னோ மற்றவர்க்
காணாது அமைவில கண்.Pēṇātu peṭṭār uḷarmaṉṉō maṟṟavark
Kāṇātu amaivila kaṇWho loved me once, onloving now doth here remain;
Not seeing him, my eye no rest can gain - 1179
வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடை
ஆரஞர் உற்றன கண்.Vārākkāl tuñcā variṉtuñcā āyiṭai
Ārañar uṟṟaṉa kaṇWhen he comes not, all slumber flies; no sleep when he is there;
Thus every way my eyes have troubles hard to bear - 1180
மறைபெறல் ஊரார்க்கு அரிதன்றால் எம்போல்
அறைபறை கண்ணார் அகத்து.Maṟaipeṟal ūrārkku aritaṉṟāl empōl
Aṟaipaṟai kaṇṇār akattuIt is not hard for all the town the knowledge to obtain,
When eyes, as mine, like beaten tambours, make the mystery plain
பசப்புறு பருவரல் Pacappuṟu paruvaral: The Pallid Hue
- 1181
நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென்
பண்பியார்க்கு உரைக்கோ பிற.Nayantavarkku nalkāmai nērntēṉ pacantaveṉ
Paṇpiyārkku uraikkō piṟaI willed my lover absent should remain;
Of pining's sickly hue to whom shall I complain - 1182
அவர்தந்தார் என்னும் தகையால் இவர்தந்தென்
மேனிமேல் ஊரும் பசப்பு.Avartantār eṉṉum takaiyāl ivartanteṉ
Mēṉimēl ūrum pacappu'He gave': this sickly hue thus proudly speaks,
Then climbs, and all my frame its chariot makes - 1183
சாயலும் நாணும் அவர்கொண்டார் கைம்மாறா
நோயும் பசலையும் தந்து.Cāyalum nāṇum avarkoṇṭār kaimmāṟā
Nōyum pacalaiyum tantuOf comeliness and shame he me bereft,
While pain and sickly hue, in recompense, he left - 1184
உள்ளுவன் மன்யான் உரைப்பது அவர்திறமால்
கள்ளம் பிறவோ பசப்பு.Uḷḷuvaṉ maṉyāṉ uraippatu avartiṟamāl
Kaḷḷam piṟavō pacappuI meditate his words, his worth is theme of all I say,
This sickly hue is false that would my trust betray - 1185
உவக்காண்எம் காதலர் செல்வார் இவக்காண்என்
மேனி பசப்பூர் வது.Uvakkāṇem kātalar celvār ivakkāṇeṉ
Mēṉi pacappūr vatuMy lover there went forth to roam;
This pallor of my frame usurps his place at home - 1186
விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கன்
முயக்கற்றம் பார்க்கும் பசப்பு.Viḷakkaṟṟam pārkkum iruḷēpōl koṇkaṉ
Muyakkaṟṟam pārkkum pacappuAs darkness waits till lamp expires, to fill the place,
This pallor waits till I enjoy no more my lord's embrace - 1187
புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில்
அள்ளிக்கொள் வற்றே பசப்பு.Pullik kiṭantēṉ puṭaipeyarntēṉ avvaḷavil
Aḷḷikkoḷ vaṟṟē pacappuI lay in his embrace, I turned unwittingly;
Forthwith this hue, as you might grasp it, came on me - 1188
பசந்தாள் இவள்என்பது அல்லால் இவளைத்
துறந்தார் அவர்என்பார் இல்.Pacantāḷ ivaḷeṉpatu allāl ivaḷait
Tuṟantār avareṉpār ilOn me, because I pine, they cast a slur;
But no one says, 'He first deserted her.' - 1189
பசக்கமன் பட்டாங்கென் மேனி நயப்பித்தார்
நன்னிலையர் ஆவர் எனின்.Pacakkamaṉ paṭṭāṅkeṉ mēṉi nayappittār
Naṉṉilaiyar āvar eṉiṉWell let my frame, as now, be sicklied o'er with pain,
If he who won my heart's consent, in good estate remain - 1190
பசப்பெனப் பேர்பெறுதல் நன்றே நயப்பித்தார்
நல்காமை தூற்றார் எனின்.Pacappeṉap pērpeṟutal naṉṟē nayappittār
Nalkāmai tūṟṟār eṉiṉ'Tis well, though men deride me for my sickly hue of pain;
If they from calling him unkind, who won my love, refrain
தனிப்படர் மிகுதி Taṉippaṭar mikuti: The Solitary Anguish
- 1191
தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே
காமத்துக் காழில் கனி.Tāmvīḻvār tamvīḻap peṟṟavar peṟṟārē
Kāmattuk kāḻil kaṉiThe bliss to be beloved by those they love who gains,
Of love the stoneless, luscious fruit obtains - 1192
வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு
வீழ்வார் அள க்கும் அளி.Vāḻvārkku vāṉam payantaṟṟāl vīḻvārkku
Vīḻvār aḷa kkum aḷiAs heaven on living men showers blessings from above,
Is tender grace by lovers shown to those they love - 1193
வீழுநர் வீழப் படுவார்க்கு அமையுமே
வாழுநம் என்னும் செருக்கு.Vīḻunar vīḻap paṭuvārkku amaiyumē
Vāḻunam eṉṉum cerukkuWho love and are beloved to them alone
Belongs the boast, 'We've made life's very joys our own.' - 1194
வீழப் படுவார் கெழீஇயிலர் தாம்வீழ்வார்
வீழப் படாஅர் எனின்.Vīḻap paṭuvār keḻīiyilar tāmvīḻvār
Vīḻap paṭāar eṉiṉThose well-beloved will luckless prove,
Unless beloved by those they love - 1195
நாம்காதல் கொண்டார் நமக்கெவன் செய்பவோ
தாம்காதல் கொள்ளாக் கடை.Nāmkātal koṇṭār namakkevaṉ ceypavō
Tāmkātal koḷḷāk kaṭaiFrom him I love to me what gain can be,
Unless, as I love him, he loveth me - 1196
ஒருதலையான் இன்னாது காமம்காப் போல
இருதலை யானும் இனிது.Orutalaiyāṉ iṉṉātu kāmamkāp pōla
Irutalai yāṉum iṉituLove on one side is bad; like balanced load
By porter borne, love on both sides is good - 1197
பருவரலும் பைதலும் காணான்கொல் காமன்
ஒருவர்கண் நின்றொழுகு வான்.Paruvaralum paitalum kāṇāṉkol kāmaṉ
Oruvarkaṇ niṉṟoḻuku vāṉWhile Kaman rushes straight at me alone,
Is all my pain and wasting grief unknown - 1198
வீழ்வாரின் இன்சொல் பெறாஅது உலகத்து
வாழ்வாரின் வன்கணார் இல்.Vīḻvāriṉ iṉcol peṟāatu ulakattu
Vāḻvāriṉ vaṉkaṇār ilWho hear from lover's lips no pleasant word from day to day,
Yet in the world live out their life,- no braver souls than they - 1199
நசைஇயார் நல்கார் எனினும் அவர்மாட்டு
இசையும் இனிய செவிக்கு.Nacaiiyār nalkār eṉiṉum avarmāṭṭu
Icaiyum iṉiya cevikkuThough he my heart desires no grace accords to me,
Yet every accent of his voice is melody - 1200
உறாஅர்க்கு உறுநோய் உரைப்பாய் கடலைச்
செறாஅஅய் வாழிய நெஞ்சு.Uṟāarkku uṟunōy uraippāy kaṭalaic
Ceṟāaay vāḻiya neñcuTell him thy pain that loves not thee?
Farewell, my soul, fill up the sea
நினைந்தவர் புலம்பல் Niṉaintavar pulampal: Sad Memories
- 1201
உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்
கள்ளினும் காமம் இனிது.Uḷḷiṉum tīrāp perumakiḻ ceytalāl
Kaḷḷiṉum kāmam iṉituFrom thought of her unfailing gladness springs,
Sweeter than palm-rice wine the joy love brings - 1202
எனைத்தொனறு இனிதேகாண் காமம்தாம் வீழ்வார்
நினைப்ப வருவதொன்று ஏல்.Eṉaittoṉaṟu iṉitēkāṇ kāmamtām vīḻvār
Niṉaippa varuvatoṉṟu ēlHow great is love! Behold its sweetness past belief!
Think on the lover, and the spirit knows no grief - 1203
நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல்
சினைப்பது போன்று கெடும்.Niṉaippavar pōṉṟu niṉaiyārkol tummal
Ciṉaippatu pōṉṟu keṭumA fit of sneezing threatened, but it passed away;
He seemed to think of me, but do his fancies stray - 1204
யாமும் உளேங்கொல் அவர்நெஞ்சத்து எந்நெஞ்சத்து
ஓஒ உளரே அவர்.Yāmum uḷēṅkol avarneñcattu enneñcattu
Ōo uḷarē avarHave I a place within his heart!
From mine, alas! he never doth depart - 1205
தம்நெஞ்சத்து எம்மைக் கடிகொண்டார் நாணார்கொல்
எம்நெஞ்சத்து ஓவா வரல்.Tamneñcattu emmaik kaṭikoṇṭār nāṇārkol
Emneñcattu ōvā varalMe from his heart he jealously excludes:
Hath he no shame who ceaseless on my heart intrudes - 1206
மற்றியான் என்னுளேன் மன்னோ அவரொடியான்
உற்றநாள் உள்ள உளேன்.Maṟṟiyāṉ eṉṉuḷēṉ maṉṉō avaroṭiyāṉ
Uṟṟanāḷ uḷḷa uḷēṉHow live I yet? I live to ponder o'er
The days of bliss with him that are no more - 1207
மறப்பின் எவனாவன் மற்கொல் மறப்பறியேன்
உள்ளினும் உள்ளம் சுடும்.Maṟappiṉ evaṉāvaṉ maṟkol maṟappaṟiyēṉ
Uḷḷiṉum uḷḷam cuṭumIf I remembered not what were I then? And yet,
The fiery smart of what my spirit knows not to forget - 1208
எனைத்து நினைப்பினும் காயார் அனைத்தன்றோ
காதலர் செய்யும் சிறப்பு.Eṉaittu niṉaippiṉum kāyār aṉaittaṉṟō
Kātalar ceyyum ciṟappuMy frequent thought no wrath excites
It is not so? This honour doth my love on me bestow - 1209
விளியுமென் இன்னுயிர் வேறல்லம் என்பார்
அளியின்மை ஆற்ற நினைந்து.Viḷiyumeṉ iṉṉuyir vēṟallam eṉpār
Aḷiyiṉmai āṟṟa niṉaintuDear life departs, when his ungracious deeds
I ponder o'er, Who said erewhile, 'We're one for evermore' - 1210
விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப்
படாஅதி வாழி மதி.Viṭāatu ceṉṟāraik kaṇṇiṉāl kāṇap
Paṭāati vāḻi matiSet not; so may'st thou prosper, moon! that eyes may see
My love who went away, but ever bides with me
கனவுநிலை உரைத்தல் Kaṉavunilai uraittal: The Visions of the Night
- 1211
காதலர் தூதொடு வந்த கனவினுக்கு
யாதுசெய் வேன்கொல் விருந்து.Kātalar tūtoṭu vanta kaṉaviṉukku
Yātucey vēṉkol viruntuIt came and brought to me, that nightly vision rare,
A message from my love,- what feast shall I prepare - 1212
கயலுண்கண் யானிரப்பத் துஞ்சிற் கலந்தார்க்கு
உயலுண்மை சாற்றுவேன் மன்.Kayaluṇkaṇ yāṉirappat tuñciṟ kalantārkku
Uyaluṇmai cāṟṟuvēṉ maṉIf my dark, carp-like eye will close in sleep, as I implore,
The tale of my long-suffering life I'll tell my loved one o'er - 1213
நனவினால் நல்கா தவரைக் கனவினால்
காண்டலின் உண்டென் உயிர்.Naṉaviṉāl nalkā tavaraik kaṉaviṉāl
Kāṇṭaliṉ uṇṭeṉ uyirHim, who in waking hour no kindness shows,
In dreams I see; and so my lifetime goes - 1214
கனவினான் உண்டாகும் காமம் நனவினான்
நல்காரை நாடித் தரற்கு.Kaṉaviṉāṉ uṇṭākum kāmam naṉaviṉāṉ
Nalkārai nāṭit taraṟkuSome pleasure I enjoy when him who loves not me
In waking hours, the vision searches out and makes me see - 1215
நனவினால் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான்
கண்ட பொழுதே இனிது.Naṉaviṉāl kaṇṭatūum āṅkē kaṉavuntāṉ
Kaṇṭa poḻutē iṉituAs what I then beheld in waking hour was sweet,
So pleasant dreams in hour of sleep my spirit greet - 1216
நனவென ஒன்றில்லை ஆயின் கனவினால்
காதலர் நீங்கலர் மன்.Naṉaveṉa oṉṟillai āyiṉ kaṉaviṉāl
Kātalar nīṅkalar maṉAnd if there were no waking hour, my love
In dreams would never from my side remove - 1217
நனவினால் நல்காக் கொடியார் கனவனால்
என்எம்மைப் பீழிப் பது.Naṉaviṉāl nalkāk koṭiyār kaṉavaṉāl
Eṉemmaip pīḻip patuThe cruel one, in waking hour, who all ungracious seems,
Why should he thus torment my soul in nightly dreams - 1218
துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால்
நெஞ்சத்தர் ஆவர் விரைந்து.Tuñcuṅkāl tōḷmēlar āki viḻikkuṅkāl
Neñcattar āvar viraintuAnd when I sleep he holds my form embraced;
And when I wake to fill my heart makes haste - 1219
நனவினால் நல்காரை நோவர் கனவினால்
காதலர்க் காணா தவர்.Naṉaviṉāl nalkārai nōvar kaṉaviṉāl
Kātalark kāṇā tavarIn dreams who ne'er their lover's form perceive,
For those in waking hours who show no love will grieve - 1220
நனவினால் நம்நீத்தார் என்பர் கனவினால்
காணார்கொல் இவ்வூ ரவர்.Naṉaviṉāl namnīttār eṉpar kaṉaviṉāl
Kāṇārkol ivvū ravarThey say, that he in waking hours has left me lone;
In dreams they surely see him not,- these people of the town;
பொழுதுகண்டு இரங்கல் Poḻutukaṇṭu iraṅkal: Lamentations at Eventide
- 1221
மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும்
வேலைநீ வாழி பொழுது.Mālaiyō allai maṇantār uyiruṇṇum
Vēlainī vāḻi poḻutuThou art not evening, but a spear that doth devour
The souls of brides; farewell, thou evening hour - 1222
புன்கண்ணை வாழி மருள்மாலை எம்கேள்போல்
வன்கண்ண தோநின் துணை.Puṉkaṇṇai vāḻi maruḷmālai emkēḷpōl
Vaṉkaṇṇa tōniṉ tuṇaiThine eye is sad; Hail, doubtful hour of eventide!
Of cruel eye, as is my spouse, is too thy bride - 1223
பனிஅரும்பிப் பைதல்கொள் மாலை துனிஅரும்பித்
துன்பம் வளர வரும்.Paṉiarumpip paitalkoḷ mālai tuṉiarumpit
Tuṉpam vaḷara varumWith buds of chilly dew wan evening's shade enclose;
My anguish buds space and all my sorrow grows - 1224
காதலர் இல்வழி மாலை கொலைக்களத்து
ஏதிலர் போல வரும்.Kātalar ilvaḻi mālai kolaikkaḷattu
Ētilar pōla varumWhen absent is my love, the evening hour descends,
As when an alien host to field of battle wends - 1225
காலைக்குச் செய்தநன்று என்கொல் எவன்கொல்யான்
மாலைக்குச் செய்த பகை?Kālaikkuc ceytanaṉṟu eṉkol evaṉkolyāṉ
Mālaikkuc ceyta pakai?O morn, how have I won thy grace? thou bring'st relief
O eve, why art thou foe! thou dost renew my grief - 1226
மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத
காலை அறிந்த திலேன்.Mālainōy ceytal maṇantār akalāta
Kālai aṟinta tilēṉThe pangs that evening brings I never knew,
Till he, my wedded spouse, from me withdrew - 1227
காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி
மாலை மலரும்இந் நோய்.Kālai arumpip pakalellām pōtāki
Mālai malarumin nōyMy grief at morn a bud, all day an opening flower,
Full-blown expands in evening hour - 1228
அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன்
குழல்போலும் கொல்லும் படை.Aḻalpōlum mālaikkut tūtāki āyaṉ
Kuḻalpōlum kollum paṭaiThe shepherd's pipe is like a murderous weapon, to my ear,
For it proclaims the hour of ev'ning's fiery anguish near - 1229
பதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டு
மாலை படர்தரும் போழ்து.Patimaruṇṭu paital uḻakkum matimaruṇṭu
Mālai paṭartarum pōḻtuIf evening's shades, that darken all my soul, extend;
From this afflicted town will would of grief ascend - 1230
பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலை
மாயும்என் மாயா உயிர்.Poruḷmālai yāḷarai uḷḷi maruḷmālai
Māyumeṉ māyā uyirThis darkening eve, my darkling soul must perish utterly;
Remembering him who seeks for wealth, but seeks not me
உறுப்புநலன் அழிதல் Uṟuppunalaṉ aḻital: Wasting Away
- 1231
சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார் உள்ளி
நறுமலர் நாணின கண்.Ciṟumai namakkoḻiyac cēṭceṉṟār uḷḷi
Naṟumalar nāṇiṉa kaṇThine eyes grown dim are now ashamed the fragrant flow'rs to see,
Thinking on him, who wand'ring far, leaves us in misery - 1232
நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும்
பசந்து பனிவாரும் கண்.Nayantavar nalkāmai colluva pōlum
Pacantu paṉivārum kaṇThe eye, with sorrow wan, all wet with dew of tears,
As witness of the lover's lack of love appears - 1233
தணந்தமை சால அறிவிப்ப போலும்
மணந்தநாள் வீங்கிய தோள்.Taṇantamai cāla aṟivippa pōlum
Maṇantanāḷ vīṅkiya tōḷThese withered arms, desertion's pangs abundantly display,
That swelled with joy on that glad nuptial day - 1234
பணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணைநீங்கித்
தொல்கவின் வாடிய தோள்.Paṇainīṅkip paintoṭi cōrum tuṇainīṅkit
Tolkaviṉ vāṭiya tōḷWhen lover went, then faded all their wonted charms,
And armlets' golden round slips off from these poor wasted arms - 1235
கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு
தொல்கவின் வாடிய தோள்.Koṭiyār koṭumai uraikkum toṭiyoṭu
Tolkaviṉ vāṭiya tōḷThese wasted arms, the bracelet with their wonted beauty gone,
The cruelty declare of that most cruel one - 1236
தொடியொடு தோள்நெகிழ நோவல் அவரைக்
கொடியர் எனக்கூறல் நொந்து.Toṭiyoṭu tōḷnekiḻa nōval avaraik
Koṭiyar eṉakkūṟal nontuI grieve, 'tis pain to me to hear him cruel chid,
Because the armlet from my wasted arm has slid - 1237
பாடு பெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென்
வாடுதோட் பூசல் உரைத்து.Pāṭu peṟutiyō neñcē koṭiyārkkeṉ
Vāṭutōṭ pūcal uraittuMy heart! say ought of glory wilt thou gain,
If to that cruel one thou of thy wasted arms complain - 1238
முயங்கிய கைகளை ஊக்கப் பசந்தது
பைந்தொடிப் பேதை நுதல்.Muyaṅkiya kaikaḷai ūkkap pacantatu
Paintoṭip pētai nutalOne day the fervent pressure of embracing arms I checked,
Grew wan the forehead of the maid with golden armlet decked - 1239
முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற
பேதை பெருமழைக் கண்.Muyakkiṭait taṇvaḷi pōḻap pacappuṟṟa
Pētai perumaḻaik kaṇAs we embraced a breath of wind found entrance there;
The maid's large liquid eyes were dimmed with care - 1240
கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே
ஒண்ணுதல் செய்தது கண்டு.Kaṇṇiṉ pacappō paruvaral eytiṉṟē
Oṇṇutal ceytatu kaṇṭuThe dimness of her eye felt sorrow now,
Beholding what was done by that bright brow
நெஞ்சொடு கிளத்தல் Neñcoṭu kiḷattal: Soliloquy
- 1241
நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும்
எவ்வநோய் தீர்க்கும் மருந்து.Niṉaittoṉṟu collāyō neñcē eṉaittoṉṟum
Evvanōy tīrkkum maruntuMy heart, canst thou not thinking of some med'cine tell,
Not any one, to drive away this grief incurable - 1242
காதல் அவரிலர் ஆகநீ நோவது
பேதைமை வாழியென் நெஞ்சு.Kātal avarilar ākanī nōvatu
Pētaimai vāḻiyeṉ neñcuSince he loves not, thy smart
Is folly, fare thee well my heart - 1243
இருந்துள்ளி என்பரிதல் நெஞ்சே பரிந்துள்ளல்
பைதல்நோய் செய்தார்கண் இல்.Iruntuḷḷi eṉparital neñcē parintuḷḷal
Paitalnōy ceytārkaṇ ilWhat comes of sitting here in pining thought, O heart?
He knows No pitying thought, the cause of all these wasting woes - 1244
கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத்
தின்னும் அவர்க்காணல் உற்று.Kaṇṇum koḷaccēṟi neñcē ivaiyeṉṉait
Tiṉṉum avarkkāṇal uṟṟuO rid me of these eyes, my heart; for they,
Longing to see him, wear my life away - 1245
செற்றார் எனக்கை விடல்உண்டோ நெஞ்சேயாம்
உற்றால் உறாஅ தவர்.Ceṟṟār eṉakkai viṭaluṇṭō neñcēyām
Uṟṟāl uṟāa tavarO heart, as a foe, can I abandon utterly
Him who, though I long for him, longs not for me - 1246
கலந்துணர்த்தும் காதலர்க் கண்டாற் புலந்துணராய்
பொய்க்காய்வு காய்திஎன் நெஞ்சு.Kalantuṇarttum kātalark kaṇṭāṟ pulantuṇarāy
Poykkāyvu kāytieṉ neñcuMy heart, false is the fire that burns; thou canst not wrath maintain,
If thou thy love behold, embracing, soothing all thy pain - 1247
காமம் விடுஒன்றோ நாண்விடு நன்னெஞ்சே
யானோ பொறேன்இவ் விரண்டு.Kāmam viṭuoṉṟō nāṇviṭu naṉṉeñcē
Yāṉō poṟēṉiv viraṇṭuOr bid thy love, or bid thy shame depart;
For me, I cannot bear them both, my worthy heart - 1248
பரிந்தவர் நல்காரென்று ஏங்கிப் பிரிந்தவர்
பின்செல்வாய் பேதைஎன் நெஞ்சு.Parintavar nalkāreṉṟu ēṅkip pirintavar
Piṉcelvāy pētaieṉ neñcuThou art befooled, my heart, thou followest him who flees from thee;
And still thou yearning criest: 'He will nor pity show nor love to me.' - 1249
உள்ளத்தார் காத லவரால் உள்ளிநீ
யாருழைச் சேறியென் நெஞ்சு.Uḷḷattār kāta lavarāl uḷḷinī
Yāruḻaic cēṟiyeṉ neñcuMy heart! my lover lives within my mind;
Roaming, whom dost thou think to find - 1250
துன்னாத் துறந்தாரை நெஞ்சத்து உடையேமா
இன்னும் இழத்தும் கவின்.Tuṉṉāt tuṟantārai neñcattu uṭaiyēmā
Iṉṉum iḻattum kaviṉIf I should keep in mind the man who utterly renounces me,
My soul must suffer further loss of dignity
நிறையழிதல் Niṟaiyaḻital: Reserve Overcome
- 1251
காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும்
நாணுத்தாழ் வீழ்த்த கதவு.Kāmak kaṇicci uṭaikkum niṟaiyeṉṉum
Nāṇuttāḻ vīḻtta katavuOf womanly reserve love's axe breaks through the door,
Barred by the bolt of shame before - 1252
காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை
யாமத்தும் ஆளும் தொழில்.Kāmam eṉavoṉṟō kaṇṇiṉṟeṉ neñcattai
Yāmattum āḷum toḻilWhat men call love is the one thing of merciless power;
It gives my soul no rest, e'en in the midnight hour - 1253
மறைப்பேன்மன் காமத்தை யானோ குறிப்பின்றித்
தும்மல்போல் தோன்றி விடும்.Maṟaippēṉmaṉ kāmattai yāṉō kuṟippiṉṟit
Tummalpōl tōṉṟi viṭumI would my love conceal, but like a sneeze
It shows itself, and gives no warning sign - 1254
நிறையுடையேன் என்பேன்மன் யானோஎன் காமம்
மறையிறந்து மன்று படும்.Niṟaiyuṭaiyēṉ eṉpēṉmaṉ yāṉōeṉ kāmam
Maṟaiyiṟantu maṉṟu paṭumIn womanly reserve I deemed myself beyond assail;
But love will come abroad, and casts away the veil - 1255
செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோய்
உற்றார் அறிவதொன்று அன்று.Ceṟṟārpiṉ cellāp peruntakaimai kāmanōy
Uṟṟār aṟivatoṉṟu aṉṟuThe dignity that seeks not him who acts as foe,
Is the one thing that loving heart can never know - 1256
செற்றவர் பின்சேறல் வேண்டி அளித்தரோ
எற்றென்னை உற்ற துயர்.Ceṟṟavar piṉcēṟal vēṇṭi aḷittarō
Eṟṟeṉṉai uṟṟa tuyarMy grief how full of grace, I pray you see!
It seeks to follow him that hateth me - 1257
நாணென ஒன்றோ அறியலம் காமத்தால்
பேணியார் பெட்ப செயின்.Nāṇeṉa oṉṟō aṟiyalam kāmattāl
Pēṇiyār peṭpa ceyiṉNo sense of shame my gladdened mind shall prove,
When he returns my longing heart to bless with love - 1258
பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோநம்
பெண்மை உடைக்கும் படை.Paṉmāyak kaḷvaṉ paṇimoḻi aṉṟōnam
Peṇmai uṭaikkum paṭaiThe words of that deceiver, versed in every wily art,
Are instruments that break through every guard of woman's heart - 1259
புலப்பல் எனச்சென்றேன் புல்லினேன் நெஞ்சம்
கலத்தல் உறுவது கண்டு.Pulappal eṉacceṉṟēṉ pulliṉēṉ neñcam
Kalattal uṟuvatu kaṇṭu'I'll shun his greeting'; saying thus with pride away I went:
I held him in my arms, for straight I felt my heart relent - 1260
நிணந்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க்கு உண்டோ
புணர்ந்தூடி நிற்பேம் எனல்.Niṇantīyil iṭṭaṉṉa neñciṉārkku uṇṭō
Puṇarntūṭi niṟpēm eṉal'We'll stand aloof and then embrace': is this for them to say,
Whose hearts are as the fat that in the blaze dissolves away
அவர்வயின் விதும்பல் Avarvayiṉ vitumpal: Mutual Desire
- 1261
வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற
நாளொற்றித் தேய்ந்த விரல்.Vāḷaṟṟup puṟkeṉṟa kaṇṇum avarceṉṟa
Nāḷoṟṟit tēynta viralMy eyes have lost their brightness, sight is dimmed; my fingers worn,
With nothing on the wall the days since I was left forlorn - 1262
இலங்கிழாய் இன்று மறப்பின்என் தோள்மேல்
கலங்கழியும் காரிகை நீத்து.Ilaṅkiḻāy iṉṟu maṟappiṉeṉ tōḷmēl
Kalaṅkaḻiyum kārikai nīttuO thou with gleaming jewels decked, could I forget for this one day,
Henceforth these bracelets from my arms will slip, my beauty worn away - 1263
உரன்நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார்
வரல்நசைஇ இன்னும் உளேன்.Uraṉnacaii uḷḷam tuṇaiyākac ceṉṟār
Varalnacaii iṉṉum uḷēṉOn victory intent, His mind sole company he went;
And I yet life sustain And long to see his face again - 1264
கூடிய காமம் பிரிந்தார் வரவுள்ளிக்
கோடுகொ டேறுமென் நெஞ்சு.Kūṭiya kāmam pirintār varavuḷḷik
Kōṭuko ṭēṟumeṉ neñcu'He comes again, who left my side, and I shall taste love's joy,'-
My heart with rapture swells, when thoughts like these my mind employ - 1265
காண்கமன் கொண்கனைக் கண்ணாரக் கண்டபின்
நீங்கும்என் மென்தோள் பசப்பு.Kāṇkamaṉ koṇkaṉaik kaṇṇārak kaṇṭapiṉ
Nīṅkumeṉ meṉtōḷ pacappuO let me see my spouse again and sate these longing eyes!
That instant from my wasted frame all pallor flies - 1266
வருகமன் கொண்கன் ஒருநாள் பருகுவன்
பைதல்நோய் எல்லாம் கெட.Varukamaṉ koṇkaṉ orunāḷ parukuvaṉ
Paitalnōy ellām keṭaO let my spouse but come again to me one day!
I'll drink that nectar: wasting grief shall flee away - 1267
புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ கலப்பேன்கொல்
கண்அன்ன கேளிர் விரன்.Pulappēṉkol pulluvēṉ kollō kalappēṉkol
Kaṇaṉṉa kēḷir viraṉShall I draw back, or yield myself, or shall both mingled be,
When he returns, my spouse, dear as these eyes to me - 1268
வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்து
மாலை அயர்கம் விருந்து.Viṉaikalantu veṉṟīka vēntaṉ maṉaikalantu
Mālai ayarkam viruntuO would my king would fight, o'ercome, devide the spoil;
At home, to-night, the banquet spread should crown the toil - 1269
ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேண் சென்றார்
வருநாள்வைத்து ஏங்கு பவர்க்கு.Orunāḷ eḻunāḷpōl cellumcēṇ ceṉṟār
Varunāḷvaittu ēṅku pavarkkuOne day will seem like seven to those who watch and yearn
For that glad day when wanderers from afar return - 1270
பெறின்என்னாம் பெற்றக்கால் என்னாம் உறினென்னாம்
உள்ளம் உடைந்துக்கக் கால்.Peṟiṉeṉṉām peṟṟakkāl eṉṉām uṟiṉeṉṉām
Uḷḷam uṭaintukkak kālWhat's my return, the meeting hour, the wished-for greeting worth,
If she heart-broken lie, with all her life poured forth
குறிப்பறிவுறுத்தல் Kuṟippaṟivuṟuttal: The Reading of the Signs
- 1271
கரப்பினுங் கையிகந் தொல்லாநின் உண்கண்
உரைக்கல் உறுவதொன் றுண்டு.Karappiṉuṅ kaiyikan tollāniṉ uṇkaṇ
Uraikkal uṟuvatoṉ ṟuṇṭuThou hid'st it, yet thine eye, disdaining all restraint,
Something, I know not, what, would utter of complaint - 1272
கண்ணிறைந்த காரிகைக் காம்பேர்தோட் பேதைக்குப்
பெண்நிறைந்த நீர்மை பெரிது.Kaṇṇiṟainta kārikaik kāmpērtōṭ pētaikkup
Peṇniṟainta nīrmai perituThe simple one whose beauty fills mine eye, whose shoulders curve
Like bambu stem, hath all a woman's modest sweet reserve - 1273
மணியில் திகழ்தரு நூல்போல் மடந்தை
அணியில் திகழ்வதொன்று உண்டு.Maṇiyil tikaḻtaru nūlpōl maṭantai
Aṇiyil tikaḻvatoṉṟu uṇṭuAs through the crystal beads is seen the thread on which they're strung
So in her beauty gleams some thought cannot find a tongue - 1274
முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை
நகைமொக்குள் உள்ளதொன் றுண்டு.Mukaimokkuḷ uḷḷatu nāṟṟampōl pētai
Nakaimokkuḷ uḷḷatoṉ ṟuṇṭuAs fragrance in the opening bud, some secret lies
Concealed in budding smile of this dear damsel's eyes - 1275
செறிதொடி செய்திறந்த கள்ளம் உறுதுயர்
தீர்க்கும் மருந்தொன்று உடைத்து.Ceṟitoṭi ceytiṟanta kaḷḷam uṟutuyar
Tīrkkum maruntoṉṟu uṭaittuThe secret wiles of her with thronging armlets decked,
Are medicines by which my raising grief is checked - 1276
பெரிதாற்றிப் பெட்பக் கலத்தல் அரிதாற்றி
அன்பின்மை சூழ்வ துடைத்து.Peritāṟṟip peṭpak kalattal aritāṟṟi
Aṉpiṉmai cūḻva tuṭaittuWhile lovingly embracing me, his heart is only grieved:
It makes me think that I again shall live of love bereaved - 1277
தண்ணந் துறைவன் தணந்தமை நம்மினும்
முன்னம் உணர்ந்த வளை.Taṇṇan tuṟaivaṉ taṇantamai nammiṉum
Muṉṉam uṇarnta vaḷaiMy severance from the lord of this cool shore,
My very armlets told me long before - 1278
நெருநற்றுச் சென்றார்எம் காதலர் யாமும்
எழுநாளேம் மேனி பசந்து.Nerunaṟṟuc ceṉṟārem kātalar yāmum
Eḻunāḷēm mēṉi pacantuMy loved one left me, was it yesterday?
Days seven my pallid body wastes away - 1279
தொடிநோக்கி மென்தோளும் நோக்கி அடிநோக்கி
அஃதாண் டவள்செய் தது.Toṭinōkki meṉtōḷum nōkki aṭinōkki
Aḵtāṇ ṭavaḷcey tatuShe viewed her tender arms, she viewed the armlets from them slid;
She viewed her feet: all this the lady did - 1280
பெண்ணினால் பெண்மை உடைத்தென்ப கண்ணினால்
காமநோய் சொல்லி இரவு.Peṇṇiṉāl peṇmai uṭaitteṉpa kaṇṇiṉāl
Kāmanōy colli iravuTo show by eye the pain of love, and for relief to pray,
Is womanhood's most womanly device, men say
புணர்ச்சி விதும்பல் Puṇarcci vitumpal: Desire for Reunion
- 1281
உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்கில் காமத்திற் குண்டு.Uḷḷak kaḷittalum kāṇa makiḻtalum
Kaḷḷukkil kāmattiṟ kuṇṭuGladness at the thought, rejoicing at the sight,
Not palm-tree wine, but love, yields such delight - 1282
தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத்துணையும்
காமம் நிறைய வரின்.Tiṉaittuṇaiyum ūṭāmai vēṇṭum paṉaittuṇaiyum
Kāmam niṟaiya variṉWhen as palmyra tall, fulness of perfect love we gain,
Distrust can find no place small as the millet grain - 1283
பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக்
காணா தமையல கண்.Pēṇātu peṭpavē ceyyiṉum koṇkaṉaik
Kāṇā tamaiyala kaṇAlthough his will his only law, he lightly value me,
My heart knows no repose unless my lord I see - 1284
ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து
கூடற்கண் சென்றது என் னெஞ்சு.Ūṭaṟkaṇ ceṉṟēṉmaṉ tōḻi atumaṟantu
Kūṭaṟkaṇ ceṉṟatu eṉ ṉeñcuMy friend, I went prepared to show a cool disdain;
My heart, forgetting all, could not its love restrain - 1285
எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன்
பழிகாணேன் கண்ட இடத்து.Eḻutuṅkāl kōlkāṇāk kaṇṇēpōl koṇkaṉ
Paḻikāṇēṉ kaṇṭa iṭattuThe eye sees not the rod that paints it; nor can
ISee any fault, when I behold my husband nigh - 1286
காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால்
காணேன் தவறல் லவை.Kāṇuṅkāl kāṇēṉ tavaṟāya kāṇākkāl
Kāṇēṉ tavaṟal lavaiWhen him I see, to all his faults I'm blind;
But when I see him not, nothing but faults I find - 1287
உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல்
பொய்த்தல் அறிந்தென் புலந்து.Uyttal aṟintu puṉalpāy pavarēpōl
Poyttal aṟinteṉ pulantuAs those of rescue sure, who plunge into the stream,
So did I anger feign, though it must falsehood seem - 1288
இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்குக்
கள்ளற்றே கள்வநின் மார்பு.Iḷittakka iṉṉā ceyiṉum kaḷittārkkuk
Kaḷḷaṟṟē kaḷvaniṉ mārpuThough shameful ill it works, dear is the palm-tree wine
To drunkards; traitor, so to me that breast of thine - 1289
மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன்
செவ்வி தலைப்படு வார்.Malariṉum mellitu kāmam cilarataṉ
Cevvi talaippaṭu vārLove is tender as an opening flower In season due
To gain its perfect bliss is rapture known to few - 1290
கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல்
என்னினும் தான்விதுப் புற்று.Kaṇṇiṉ tuṉittē kalaṅkiṉāḷ pullutal
Eṉṉiṉum tāṉvitup puṟṟuHer eye, as I drew nigh one day, with anger shone:
By love o'erpowered, her tenderness surpassed my own
நெஞ்சொடு புலத்தல் Neñcoṭu pulattal: Expostulation with Oneself
- 1291
அவர்நெஞ்சு அவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே
நீஎமக்கு ஆகா தது.Avarneñcu avarkkātal kaṇṭum evaṉneñcē
Nīemakku ākā tatuYou see his heart is his alone
O heart, why not be all my own - 1292
உறாஅ தவர்க்கண்ட கண்ணும் அவரைச்
செறாஅரெனச் சேறியென் நெஞ்சு.Uṟāa tavarkkaṇṭa kaṇṇum avaraic
Ceṟāareṉac cēṟiyeṉ neñcu'Tis plain, my heart, that he's estranged from thee;
Why go to him as though he were not enemy - 1293
கெட்டார்க்கு நட்டார்இல் என்பதோ நெஞ்சேநீ
பெட்டாங்கு அவர்பின் செலல்.Keṭṭārkku naṭṭāril eṉpatō neñcēnī
Peṭṭāṅku avarpiṉ celal'The ruined have no friends, 'they say; and so, my heart,
To follow him, at thy desire, from me thou dost depart - 1294
இனிஅன்ன நின்னொடு சூழ்வார்யார் நெஞ்சே
துனிசெய்து துவ்வாய்காண் மற்று.Iṉiaṉṉa niṉṉoṭu cūḻvāryār neñcē
Tuṉiceytu tuvvāykāṇ maṟṟu'See, thou first show offended pride, and then submit,' I bade;
Henceforth such council who will share with thee my heart - 1295
பெறாஅமை அஞ்சும் பெறின்பிரிவு அஞ்சும்
அறாஅ இடும்பைத்தென் நெஞ்சு.Peṟāamai añcum peṟiṉpirivu añcum
Aṟāa iṭumpaitteṉ neñcuI fear I shall not gain, I fear to lose him when
I gain; And thus my heart endures unceasing pain - 1296
தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத்
தினிய இருந்ததென் நெஞ்சு.Taṉiyē iruntu niṉaittakkāl eṉṉait
Tiṉiya iruntateṉ neñcuMy heart consumes me when I ponder lone,
And all my lover's cruelty bemoan - 1297
நாணும் மறந்தேன் அவர்மறக் கல்லாஎன்
மாணா மடநெஞ்சிற் பட்டு.Nāṇum maṟantēṉ avarmaṟak kallāeṉ
Māṇā maṭaneñciṟ paṭṭuFall'n 'neath the sway of this ignoble foolish heart,
Which will not him forget, I have forgotten shame - 1298
எள்ளின் இளிவாம்என்று எண்ணி அவர்திறம்
உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு.Eḷḷiṉ iḷivāmeṉṟu eṇṇi avartiṟam
Uḷḷum uyirkkātal neñcuIf I contemn him, then disgrace awaits me evermore;
My soul that seeks to live his virtues numbers o'er - 1299
துன்பத்திற்கு யாரே துணையாவார் தாமுடைய
நெஞ்சந் துணையல் வழி.Tuṉpattiṟku yārē tuṇaiyāvār tāmuṭaiya
Neñcan tuṇaiyal vaḻiAnd who will aid me in my hour of grief,
If my own heart comes not to my relief - 1300
தஞ்சம் தமரல்லர் ஏதிலார் தாமுடைய
நெஞ்சம் தமரல் வழி.Tañcam tamarallar ētilār tāmuṭaiya
Neñcam tamaral vaḻiA trifle is unfriendliness by aliens shown,
When our own heart itself is not our own
புலவி Pulavi: Pouting
- 1301
புல்லா திராஅப் புலத்தை அவர்உறும்
அல்லல்நோய் காண்கம் சிறிது.Pullā tirāap pulattai avaruṟum
Allalnōy kāṇkam ciṟituBe still reserved, decline his profferred love;
A little while his sore distress we'll prove - 1302
உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது
மிக்கற்றால் நீள விடல்.Uppamain taṟṟāl pulavi atuciṟitu
Mikkaṟṟāl nīḷa viṭalA cool reserve is like the salt that seasons well the mess,
Too long maintained, 'tis like the salt's excess - 1303
அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப்
புலந்தாரைப் புல்லா விடல்.Alantārai allalnōy ceytaṟṟāl tammaip
Pulantāraip pullā viṭal'Tis heaping griefs on those whose hearts are grieved;
To leave the grieving one without a fond embrace - 1304
ஊடி யவரை உணராமை வாடிய
வள்ளி முதலரிந் தற்று.Ūṭi yavarai uṇarāmai vāṭiya
Vaḷḷi mutalarin taṟṟuTo use no kind conciliating art when lover grieves,
Is cutting out the root of tender winding plant that droops - 1305
நலத்தகை நல்லவர்க்கு ஏஎர் புலத்தகை
பூஅன்ன கண்ணார் அகத்து.Nalattakai nallavarkku ēer pulattakai
Pūaṉṉa kaṇṇār akattuEven to men of good and worthy mind, the petulance
Of wives with flowery eyes lacks not a lovely grace - 1306
துனியும் புலவியும் இல்லாயின் காமம்
கனியும் கருக்காயும் அற்று.Tuṉiyum pulaviyum illāyiṉ kāmam
Kaṉiyum karukkāyum aṟṟuLove without hatred is ripened fruit;
Without some lesser strife, fruit immature - 1307
ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வது
நீடுவ தன்று கொல் என்று.Ūṭaliṉ uṇṭāṅkōr tuṉpam puṇarvatu
Nīṭuva taṉṟu kol eṉṟuA lovers' quarrel brings its pain, when mind afraid
Asks doubtful, 'Will reunion sweet be long delayed?' - 1308
நோதல் எவன்மற்று நொந்தாரென்று அஃதறியும்
காதலர் இல்லா வழி.Nōtal evaṉmaṟṟu nontāreṉṟu aḵtaṟiyum
Kātalar illā vaḻiWhat good can grieving do, when none who love
Are there to know the grief thy soul endures - 1309
நீரும் நிழலது இனிதே புலவியும்
வீழுநர் கண்ணே இனிது.Nīrum niḻalatu iṉitē pulaviyum
Vīḻunar kaṇṇē iṉituWater is pleasant in the cooling shade;
So coolness for a time with those we love - 1310
ஊடல் உணங்க விடுவாரோடு என்நெஞ்சம்
கூடுவேம் என்பது அவா.Ūṭal uṇaṅka viṭuvārōṭu eṉneñcam
Kūṭuvēm eṉpatu avāOf her who leaves me thus in variance languishing,
To think within my heart with love is fond desire
புலவி நுணுக்கம் Pulavi nuṇukkam: Feigned Anger
- 1311
பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொதுஉண்பர்
நண்ணேன் பரத்தநின் மார்பு.Peṇṇiyalār ellārum kaṇṇiṉ potuuṇpar
Naṇṇēṉ parattaniṉ mārpuFrom thy regard all womankind Enjoys an equal grace;
O thou of wandering fickle mind, I shrink from thine embrace - 1312
ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை
நீடுவாழ் கென்பாக் கறிந்து.Ūṭi iruntēmāt tummiṉār yāmtammai
Nīṭuvāḻ keṉpāk kaṟintuOne day we silent sulked; he sneezed: The reason well I knew;
He thought that I, to speak well pleased, Would say, 'Long life to you!' - 1313
கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக்
காட்டிய சூடினீர் என்று.Kōṭṭuppūc cūṭiṉum kāyum oruttiyaik
Kāṭṭiya cūṭiṉīr eṉṟuI wreathed with flowers one day my brow, The angry tempest lowers;
She cries, 'Pray, for what woman now Do you put on your flowers?' - 1314
யாரினும் காதலம் என்றேனா ஊடினாள்
யாரினும் யாரினும் என்று.Yāriṉum kātalam eṉṟēṉā ūṭiṉāḷ
Yāriṉum yāriṉum eṉṟu'I love you more than all beside,' 'T was thus I gently spoke;'
What all, what all?' she instant cried; And all her anger woke - 1315
இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்
கண்நிறை நீர்கொண் டனள்.Immaip piṟappil piriyalam eṉṟēṉāk
Kaṇniṟai nīrkoṇ ṭaṉaḷ'While here I live, I leave you not,' I said to calm her fears She cried,
'There, then, I read your thought'; And straight dissolved in tears - 1316
உள்ளினேன் என்றேன்மற் றென்மறந்தீர் என்றென்னைப்
புல்லாள் புலத்தக் கனள்.Uḷḷiṉēṉ eṉṟēṉmaṟ ṟeṉmaṟantīr eṉṟeṉṉaip
Pullāḷ pulattak kaṉaḷ'Each day I called to mind your charms,' 'O, then, you had forgot,'
She cried, and then her opened arms, Forthwith embraced me not - 1317
வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்
யாருள்ளித் தும்மினீர் என்று.Vaḻuttiṉāḷ tummiṉēṉ āka aḻittaḻutāḷ
Yāruḷḷit tummiṉīr eṉṟuShe hailed me when I sneezed one day; But straight with anger seized,
She cried; 'Who was the woman, pray, Thinking of whom you sneezed?' - 1318
தும்முச் செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல்
எம்மை மறைத்திரோ என்று.Tummuc ceṟuppa aḻutāḷ numaruḷḷal
Emmai maṟaittirō eṉṟuAnd so next time I checked my sneeze;
She forthwith wept and cried,(That woman difficult to please), 'Your thoughts from me you hide' - 1319
தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்கும்நீர்
இந்நீரர் ஆகுதிர் என்று.Taṉṉai uṇarttiṉum kāyum piṟarkkumnīr
Innīrar ākutir eṉṟuI then began to soothe and coax, To calm her jealous mind;'
I see', quoth she, 'to other folks How you are wondrous kind - 1320
நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர்
யாருள்ளி நோக்கினீர் என்று.Niṉaittiruntu nōkkiṉum kāyum aṉaittunīr
Yāruḷḷi nōkkiṉīr eṉṟuI silent sat, but thought the more, And gazed on her Then she
Cried out, 'While thus you eye me o'er, Tell me whose form you see'
ஊடலுவகை Ūṭaluvakai: The Pleasures of Temporary Variance
- 1321
இல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல்
வல்லது அவர்அளக்கு மாறு.Illai tavaṟavarkku āyiṉum ūṭutal
Vallatu avaraḷakku māṟuAlthough there be no fault in him, the sweetness of his love
Hath power in me a fretful jealousy to move - 1322
ஊடலின் தோன்றும் சிறுதுனி நல்லளி
வாடினும் பாடு பெறும்.Ūṭaliṉ tōṉṟum ciṟutuṉi nallaḷi
Vāṭiṉum pāṭu peṟumMy 'anger feigned' gives but a little pain;
And when affection droops, it makes it bloom again - 1323
புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு
நீரியைந் தன்னார் அகத்து.Pulattaliṉ puttēḷnāṭu uṇṭō nilattoṭu
Nīriyain taṉṉār akattuIs there a bliss in any world more utterly divine, Than
'coyness' gives, when hearts as earth and water join - 1324
புல்லி விடாஅப் புலவியுள் தோன்றுமென்
உள்ளம் உடைக்கும் படை.Pulli viṭāap pulaviyuḷ tōṉṟumeṉ
Uḷḷam uṭaikkum paṭai'Within the anger feigned' that close love's tie doth bind,
A weapon lurks, which quite breaks down my mind - 1325
தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்றோள்
அகறலின் ஆங்கொன் றுடைத்து.Tavaṟilar āyiṉum tāmvīḻvār meṉṟōḷ
Akaṟaliṉ āṅkoṉ ṟuṭaittuThough free from fault, from loved one's tender arms
To be estranged a while hath its own special charms - 1326
உணலினும் உண்டது அறல்இனிது காமம்
புணர்தலின் ஊடல் இனிது.Uṇaliṉum uṇṭatu aṟaliṉitu kāmam
Puṇartaliṉ ūṭal iṉitu'Tis sweeter to digest your food than 'tis to eat;
In love, than union's self is anger feigned more sweet - 1327
ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும்
கூடலிற் காணப் படும்.Ūṭalil tōṟṟavar veṉṟār atumaṉṉum
Kūṭaliṟ kāṇap paṭumIn lovers' quarrels, 'tis the one that first gives way,
That in re-union's joy is seen to win the day - 1328
ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக்
கூடலில் தோன்றிய உப்பு.Ūṭip peṟukuvam kollō nutalveyarppak
Kūṭalil tōṉṟiya uppuAnd shall we ever more the sweetness know of that embrace
With dewy brow; to which 'feigned anger' lent its piquant grace - 1329
ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்ப
நீடுக மன்னோ இரா.Ūṭuka maṉṉō oḷiyiḻai yāmirappa
Nīṭuka maṉṉō irāLet her, whose jewels brightly shine, aversion feign
That I may still plead on, O night, prolong thy reign - 1330
ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின்.Ūṭutal kāmattiṟku iṉpam ataṟkiṉpam
Kūṭi muyaṅkap peṟiṉA 'feigned aversion' coy to pleasure gives a zest;
The pleasure's crowned when breast is clasped to breast